நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகுவீராயின் அவ்வூர்
சத்திமுற்ற வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனை குரல் பள்ளி
பாகு பார்த்திருக்கும் என் மனைவியைக் கண்டு
செங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது போத்தி
காலது கொண்டு மெலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிக்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.
- சத்திமுற்ற புலவர்
Wednesday, February 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
konjam over da
Post a Comment